பருவமழை காரணமாக, தான் மேற்கொள்ளவிருந்த எழுச்சிப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் முதல் வாரத்தில் தொடங்குவதாக திட்டமிட்டிருந்த எழுச்சிப் பயணம் பருவமழை காரணமாக வேறு ஒரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாகக் கூறியுள்ளார். ஒரு நாள் மழையையே சமாளிக்க முடியாத வகையில் அரசின் நிர்வாகம் செயலிழந்து மக்கள் சொல்ல முடியாத அளவு துயரத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.