\
மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு: ஸ்டாலின்

மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு: ஸ்டாலின்

மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு: ஸ்டாலின்
Published on

மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக உள்ளது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார். இதில் தமிழகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட்டில் தமிழக மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறிய‌ள்ளார். 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் என்ன என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், பாரதிய ஜனதா தலைமையிலான ‌மத்திய அரசு, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். 

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிதிநிலை அறிக்கையில் அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கான திட்டங்கள் ஏதுமில்லை என சாடியுள்ள ஸ்டாலின், விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு தீர்வு காணாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் கூரியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com