ஆளுநருடனான சந்திப்பில் பேசப்பட்டது என்ன?: ஸ்டாலின் பேட்டி

ஆளுநருடனான சந்திப்பில் பேசப்பட்டது என்ன?: ஸ்டாலின் பேட்டி
ஆளுநருடனான சந்திப்பில் பேசப்பட்டது என்ன?: ஸ்டாலின் பேட்டி

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். 

ஆளுநர் அழைப்பு விடுத்ததின் பேரில் இந்தச் சந்திப்பு நடைப்பெற்றது. இந்த சந்திப்பில் ஸ்டாலினுடன் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் உடன் இருந்தார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டப்பல்கலைக் கழக துணை வேந்தர் நியமன விவகாரம் குறித்து விளக்கம் அளித்ததாக தெரிவித்தார்.
ஸ்டாலின் பேசுகையில், “சட்ட பல்கலை கழக துணை வேந்தர் பதவிக்கு சாஸ்திரி நியமிக்கப்பட்டது தவறு என்று எல்லா கட்சியின் தலைவர்களும், பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். நானும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அறிக்கை வெளியிட்டேன். அதேபோல், தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தேன். நான் எழுதிய கடிதம் விளக்கம் அளிக்கவே இந்த சந்திப்பு அழைப்பு விடுத்தார்.
பாலு, டேவிட், சாஸ்திரி ஆகிய பரிந்துரை செய்யப்பட்ட 3 பேரில் ஒருவரை தான் நியமித்திருந்தேன் என்று கூறினார். சாஸ்திரி மீது பல்வேறு புகார்களும், ஒழுங்கு நடவடிக்கையும் உள்ளது என்று கேட்டேன். அதற்கு, ‘உண்மை தான். அந்தப் புகாரில் அவர் மீது தவறு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தான் நியமனம் நடைபெற்றுள்ளது’ என்று ஆளுநர் கூறினார்” என்று கூறினார்.

மேலும், “ஆளுநரிடம் நாங்களும் ஒரு கோரிக்கை வைத்தோம், ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் எப்படி ஆய்வு செய்யலாம்? அதனால்தான் நீங்கள் எங்கெல்லாம் ஆய்வு செய்கிறீர்களோ அங்கெல்லாம் கருப்பு கொடி காட்டுகிறோம் என்று அவரிடம் கூறினேன். அதற்கு, ‘ஆய்வு பணி மேற்கொள்ளவில்லை, மாநிலத்தில் வளர்ச்சி குறித்து அறியத்தான் செல்கிறேன்’ என்று அவர் கூறினார். மாநில ஆட்சிக்கு பங்கம் விளைக்கும் வகையில் உங்கள் ஆய்வு உள்ளது என்று நாங்கள் கூறியதற்கு, நீங்க சொன்னதை நான் யோசிக்கிறேன் என்று ஆளுநர் கூறினார்” என்றார் ஸ்டாலின். 

இந்தச் சந்திப்பின் போது காவிரி விவகாரம் தொடர்பாக எதுவும் ஆலோசனை செய்யப்படவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com