இலங்கை அரசு நிறுவனங்களில் தொண்டமான் பெயரை மீண்டும் இடம்பெறச் செய்ய நடவடிக்கை தேவை என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களில் இருந்து அந்நாட்டு அரசு நீக்கியது. தொண்டமான் பெயர் நீக்கப்பட்டதற்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், தொண்டமான் பெயரை நீக்கியது மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களை கடுமையாக பாதித்துள்ளது என்று கூறியுள்ளார்.

