பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏழு வருடங்களாக நடந்து வருகிறது - கோவையில் ஸ்டாலின் திண்ணை பரப்புரை

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏழு வருடங்களாக நடந்து வருகிறது - கோவையில் ஸ்டாலின் திண்ணை பரப்புரை
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏழு வருடங்களாக நடந்து வருகிறது - கோவையில் ஸ்டாலின் திண்ணை பரப்புரை

கோவை சூலூர் தொகுதியில் மூன்றாவது முறையாக பிரச்சாரம் செய்த ஸ்டாலின், திண்ணை பரப்புரை மேற்கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

சூலூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் மூன்றாவது முறையாக இன்று பரப்புரை மேற்கொண்டார். சூலூர் தொகுதிக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி, செலகரச்சல் ஆகிய பகுதிகளில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் தேனீர் வாங்கி அருந்தினார். 

திண்ணை பிரச்சாரத்தின் போது பொதுமக்களை சந்தித்த ஸ்டாலின், அவர்களின் குறைகளைக் கேட்டார். முதலில் அப்பநாயக்கன்பட்டிக்கு சென்று திண்னை பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக ஆட்சிக்கு வர நீங்கள் உங்கள் வாக்குகளைக் அளிக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் முத்து-பவானி தம்பதிகளுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தமிழரசி என்று ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

இதனைதொடர்ந்து செலக்கரச்சல் பகுதிக்கு சென்ற ஸ்டாலின், திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களின் மத்தியில் பேசிய அவர்,உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அடிப்படை பிரச்சனைகள் ஏதும் தீர்க்கபடவில்லை என்றும், இந்த ஆட்சியில் எதுவுமே கவனிக்கப்படுவது கிடையாது, குறிப்பாக ஆட்சியாளர்கள் அவர்களைக் காப்பற்றி கொள்ளவே கவனம் செலுத்தி வருகிறார்கள் என குற்றம் சாட்டினார். பொள்ளாச்சி பாலியல் விவாகரத்தில் ஆளுங்கட்சி பிரமுகரின் மகனே சம்பந்தப்பட்டிருக்கிறார். பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கடந்த ஏழு வருடங்களாக நடந்து வருகிறது எனத் ஸ்டாலின் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com