திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை

திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை

திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை
Published on

திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதுமட்டுமில்லாமல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு திமுகவில் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஸ்டாலினின் ஆலோசனை தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com