"மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படுவது உறுதி" - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர பரப்புரை
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன்கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 23 பேரூராட்சியில் உள்ள 86 இடங்களில் பரப்புரை நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசுகையில், ’’திண்டுக்கல் மாவட்டம் வீரம் விளைந்த மாவட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக போராடிய மன்னர்களும் பாளையக்காரர்களும் திண்டுக்கல்லில் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாய் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். பெரிய மருது, சின்ன மருது, ஹைதர் அலி, திப்பு சுல்தான், வீரமங்கை வேலுநாச்சியார், ஊமத்துரை உலவிய வீரம் செறிந்த மண் திண்டுக்கல் மண் திண்டுக்கல் மாவட்டம் திமுக கோட்டையாகும்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் பெற்ற வெற்றியைபோல் உள்ளாட்சியிலும் வெற்றிபெற வேண்டும். சட்டமன்றத்தை போல வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும். திண்டுக்கல் – நத்தம் மேம்பாலம், கன்னிவாடி மகளிர் விடுதி, திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் கலன் உற்பத்தி, பாலக்கிருஷ்ணபுரம் மேம்பாலம் பணி துவக்கம், பழநி கோவிலில் மொட்டை அடிக்க இலவசம், ஆயக்குடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை பட்டியல் போட்டு சொல்லக்கூடிய அளவுக்கு சாதனைகளை செய்து உள்ளோம். நம்மளுடைய சாதனைகளை வீதி தோறும் கொண்டு சென்றாக வேண்டும். சட்ட மன்றத்தில் நாம் நிறைவேற்றுகின்ற திட்டத்தை பொதுமக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்றால் உள்ளாட்சி முழுமையாக நமது கையில் இருக்கவேண்டும். உள்ளாட்சி தேர்தலை தள்ளிபோட்ட ஆட்சி தான் அதிமுக. உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெற்று விடும் என்ற நோக்கத்தில் தான் அதிமுக தேர்தல் நடத்தவில்லை. அப்போதைய அமைச்சர் வேலுமணி பினாயில் ஊழல் செய்தவர், பிளிசிங் பவுடர் போன்றவற்றில் முறைகேடு செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சியில் 12 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர் அதிமுகவை சேர்ந்த வேலுமணி இதுவரை பதில் சொல்லவில்லை. அதற்க்கு பதில் சொல்லும் காலம் வெகு தூரம் இல்லை. அதிமுக அட்சியில் மலை அளவு ஊழல் நடைபெற்று உள்ளது. வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வருவாய் பலமடங்கு உயர்ந்துள்ளது.
தினம் ஒரு பொய் சொல்லி வருகிறார் பச்சை பொய் பழனிச்சாமி, அதிமுகவிற்கு வழங்குகின்ற வாக்கு ஊழலுக்கு எதிரான வாக்கு. பரமக்குடி துப்பாக்சுடு, பொள்ளாச்சி பாலியல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிர்ச்சைனை, சென்னை தலைமை அலுவலுகத்தில் சோதனை, பெண் காவலருக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் பழனிச்சாமி ஆட்சி. நேரு தம்பி ராமஜெயம் கொலை செய்யபட்டது அதிமுக ஆட்சியில் தான் நடந்தது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லாத ஆட்சி நடத்திய பழனிச்சாமி ஆட்சி திமுக அரசை பற்றி பேச என்ன அருகாததை இருக்கிறது.
மகளிருக்காக போராடுகிற ஆட்சி திமுக ஆட்சி, பால் விலையை குறைத்தது திமுக அரசுதான், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தைக் கொண்டு வந்தது இந்த ஆட்சிதான். இதனை அனைத்தையும் செய்தது ஸ்டாலின் தான். மக்களிடம் கேளுங்கள் பழனிசாமி அவர்களே, அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்வு என்ன ஆனது எங்கள் ஆட்சியில்தான், 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்தது திமுக தான்.
பழனிச்சாமி முதலீட்டாளர் மாநாடு நடத்தியதில் ஒன்றும் நடக்கவில்லை, பழனிச்சாமி வெளிநாடு சென்றார் வேலைவாய்ப்பு வழங்கபடும் என்று சொன்னார் அதுவும் நடக்கவில்லை, அதிமுக பொறுத்தவரை தோல்வியின் மொத்த உருவம்தான் பழனிசாமி, பொய் சொல்கின்றதை பொறுக்கமுடியாமல்தான் மக்களே இவர்களை வெளியே அனுப்பிவிட்டார்கள். கொரோனா கட்டுப்பாட்டை முதல்வர் மீறுகிறார் என்று சொல்வார்கள் அதனால்தான் காணொலி மூலமாக சந்தித்து வருகிறேன்’’ எனப் பேசினார்.