பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின் ! செல்ஃபி எடுத்த சிறுமி
மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் இருந்து மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் இருந்து மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.
கருணாநிதி மறைவையடுத்து காலியான திருவாரூர் சட்டப்பேரவைக்கு, இடைத்தேர்தல் வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பூண்டி கலைவாணனை ஆதரித்து திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கினார். பரப்புரையின்போது கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து துண்டு பிரசுரங்களை மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அங்கிருந்த சிறுவர், சிறுமிகளிடம் மு.க.ஸ்டாலின் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அப்பகுதியில் வீதி வீதியாக மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.