நீட் கோச்சிங் சென்டர்களுக்கு வசூல்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

நீட் கோச்சிங் சென்டர்களுக்கு வசூல்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

நீட் கோச்சிங் சென்டர்களுக்கு வசூல்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

நீட் கோச்சிங் சென்டர்களுக்கு 3 லட்ச ரூபாய் செல்ல வேண்டும். அதில் வசூல் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு பின் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்துள்ளன. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரியும், அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாணவ அமைப்பினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வினால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என கூறப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கு முறையான பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் எனவும், அதற்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் கூறப்படுகிறது. இதனால் கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாம்பரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின்,  " கருணாநிதி தொடுத்த வழக்கில்தான் 18-07-2013 அன்று உச்சநீதிமன்றம் நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதையும் மீறி மத்திய அரசு இன்று நீட் தேர்வை திணிக்கும் போது, இங்கு இருக்கும் பழனிசாமி தலைமையிலான குதிரை பேர ஆட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது..? நீட் பயிற்சி மையம் என்ற ஒன்றை உருவாக்கி, அதில் பயிற்சி.. அதற்கு 3 லட்சம் ரூபாய். கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களால் இந்த கட்டணத்தை எப்படி செலுத்த முடியும்..?  நீட் கோச்சிங் சென்டர்களுக்கு 3 லட்ச ரூபாய் செல்ல வேண்டும். அதில் வசூல் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டு மத்தியில் உள்ள ஆட்சி கொடுமையை ளநடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு மாநிலத்தில் உள்ள அரசு துணை போகிறது" என ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com