குட்கா ஊழல்: லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் - ஸ்டாலின்

குட்கா ஊழல்: லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் - ஸ்டாலின்

குட்கா ஊழல்: லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் - ஸ்டாலின்
Published on

குட்கா என்ற போதைப் பொருள் விற்கும் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், குட்கா விற்பனைக்காக சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள ஆதாரங்கள் திடுக்கிட வைப்பதாக கூறியுள்ளார். இந்த முறைகேட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊழலுக்காக மக்கள் நலனை சீரழிக்க இந்த அரசு கூச்சப்படாது என்பது இதன் மூலம் தெளிவாகியிருப்பதாகவும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com