\
ரஜினியின் அரசியல் வருகையால் பல மாற்றங்கள் வரும்: மு.க.அழகிரி

ரஜினியின் அரசியல் வருகையால் பல மாற்றங்கள் வரும்: மு.க.அழகிரி

ரஜினியின் அரசியல் வருகையால் பல மாற்றங்கள் வரும்: மு.க.அழகிரி
Published on

ரஜினியின் அரசியல் வருகையால் பல மாற்றங்கள் வரும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றார். சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாகவே ரஜினி அரசியலுக்கு வருவாரா..? மாட்டாரா..? என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அரசியலுக்கு வரஉள்ளதாக ரஜினி அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அவர், “ ரஜினிக்கு நல்வாழ்த்துகள். மக்களுக்கு என்னென்ன நல்ல திட்டங்கள் செய்ய வேண்டும் என அவர் மனதில் நினைத்திருக்கிறாரோ அந்தந்த திட்டங்களை அவர் காலத்தில் நிறைவேற்ற எனது வாழ்த்துகள். ரஜினியின் அரசியல் வருகையால் பல மாற்றங்கள் வரும். ரஜினியின் எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்து. ரஜினிகாந்தை விரைவில் நேரில் சந்திப்பேன்” என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com