கலப்பு திருமண ஊக்கத்தொகை: விளக்கம் கேட்டு திமுக வேட்பாளரை தடுத்து நிறுத்திய பாமகவினர்

கலப்பு திருமண ஊக்கத்தொகை: விளக்கம் கேட்டு திமுக வேட்பாளரை தடுத்து நிறுத்திய பாமகவினர்
கலப்பு திருமண ஊக்கத்தொகை: விளக்கம் கேட்டு திமுக வேட்பாளரை தடுத்து நிறுத்திய பாமகவினர்

குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரை வாக்கு சேகரிக்கவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி (தனி) திமுக வேட்பாளர் அமுலு விஜயன், மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியினர் அவரை தடுத்து நிறுத்தி, திமுக கலப்பு திருமணத்திற்கு ஊக்கத்தொகையாக 60 ஆயிரம் ரூபாயும் 1 சவரன் தங்க நகையும் வழங்கப்படுவதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். எனவே அதற்கு விளக்கம் கொடுங்கள் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு பிரச்சாரம் செய்ய விடாமல்தடுத்தனர்

.

அப்போது விரைந்து வந்த உமராபாத் காவல்துறையினர் அவர்களை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக பரப்புரை மேற்கொள்ளாமல் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமுலு விஜயன் ஆகியோர் அதே இடத்தில் நின்றனர். அப்போது கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி அங்கு ஒரு பெண் சாலையில் அமர்ந்து வாகனத்திற்கு வழிவிடாமல் மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com