“46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்துள்ளது” - சத்யபிரதா சாஹூ ஒப்புதல்

“46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்துள்ளது” - சத்யபிரதா சாஹூ ஒப்புதல்
“46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்துள்ளது” - சத்யபிரதா சாஹூ ஒப்புதல்

தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆ‌ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று மாலை கோவையிலிருந்து தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கான காரணம் என்னவென்று தெரியாததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக சேப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,  “ ஈரோடு, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்துள்ளது.

எனவே இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். அதேசமயம் தவறு நடந்துள்ள 13 மாவட்டங்களில் தேனி, ஈரோட்டில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றாக்குறையில் உள்ளன. அதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி, ஈரோட்டிற்கு மாற்றப்பட்டன. 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இதனிடைய 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com