டெல்டா பகுதியில் துணை ராணுவம் குவிந்தது ஏன்? அமைச்சர் வேலுமணி பதில்!

டெல்டா பகுதியில் துணை ராணுவம் குவிந்தது ஏன்? அமைச்சர் வேலுமணி பதில்!
டெல்டா பகுதியில் துணை ராணுவம் குவிந்தது ஏன்? அமைச்சர் வேலுமணி பதில்!

டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருப்பது ஏன்? என்ற கேள்விக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி பதிலளித்துள்ளார்.

கோவையில் உள்ள உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, ரூ.216 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கவுள்ளது. இதற்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது பேசிய அவர், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சட்டரீதியாக தொடர்ந்தது தமிழக முதலமைச்சர் தான். நியாயமான கோரிக்கைகளுக்காகவே மத்திய அரசுடன் ஒத்து போவோம். ஆனால் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம். யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. ஆந்திராவில் எம்பிக்கள் சிலர் சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ராஜினாமா செய்தார்களே, தற்போது சிறப்பு அந்தஸ்து கிடைத்து விட்டதா? ராஜினாமா செய்தாலும் அவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை.” என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை வேலுமணி சந்திக்கும் போது, டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘டெல்டா மாவட்டங்களில் நடப்பது உரிமை போராட்டம். உச்சநீதிமன்றம் மூலமாக காவிரி நீரை பெறுவதற்கான உரிமை கிடைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. விரைவில் தமிழக முதலமைச்சர் காவிரி நீரை பெற்றுத் தருவார்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com