கோவை சம்பவத்தில் கல்வீச்சு நடைபெற்ற கடைக்குச்சென்று அமைச்சர் வேலுமணி ஆறுதல்

கோவை சம்பவத்தில் கல்வீச்சு நடைபெற்ற கடைக்குச்சென்று அமைச்சர் வேலுமணி ஆறுதல்
கோவை சம்பவத்தில் கல்வீச்சு நடைபெற்ற கடைக்குச்சென்று அமைச்சர் வேலுமணி ஆறுதல்

கோவையில் யோகி ஆதித்யநாத் வருகையின் போது கடை மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற நிலையில் இன்று அக்கடைக்கு சென்ற அமைச்சர் வேலுமணி ஆறுதல் தெரிவித்தார்.

கோவை ராஜவீதியில் பாஜக கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து யோகி ஆதித்யநாத், புதன்கிழமை பரப்புரை மேற்கொண்டார். அப்போது நடைபெற்ற வாகனபேரணியின் போது, அங்கிருந்த இஸ்லாமியர் கடையின் மீது வாகனப்பேரணியில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கல்வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மாறி மாறி கோஷங்கள் எழுப்பி இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் இருதரப்பினரையும் அங்கிருந்து கலைய செய்தனர்.

இந்த சூழ்நிலையில், இச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. அன்றைய தினமே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் கல்வீச்சில் பாதிக்கப்பட்ட கடைக்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். இது தொடர்பாக பேட்டி அளித்த பாஜக வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்ற விமர்சனத்தை எதிர்கட்சியினர் வழுவாக முன்வைத்த நிலையில் இன்று அமைச்சர் வேலுமணி சம்பவம் நடந்த கடைக்கு சென்று ஆறுதல் தெரிவித்ததோடு, அமைதியான சூழல் நிலவ அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com