\
கறி வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

கறி வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

கறி வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
Published on

இறைச்சிக் கடையில் கறி வெட்டி வாக்காளர்களிடம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வாக்கு சேகரித்தார்.

வருகின்ற 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். நாளையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். கே.கே.நகர், ஜே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட வெல்லமண்டி நடராஜன், அங்கிருந்த கறிக்கடையில் 2 கிலோ கோழிக்கறியை வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com