\
தினகரனின் பேச்சு எங்கள் மனதை புண்படுத்திவிட்டது: அமைச்சர் தங்கமணி

தினகரனின் பேச்சு எங்கள் மனதை புண்படுத்திவிட்டது: அமைச்சர் தங்கமணி

தினகரனின் பேச்சு எங்கள் மனதை புண்படுத்திவிட்டது: அமைச்சர் தங்கமணி
Published on

டிடிவி தினகரன் முதலமைச்சரை மரியாதை குறைவாக பேசியது தங்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தங்கமணி, ‘அமைச்சர்களையோ, எம்.எல்.ஏக்களையோ ஜெயலலிதாவை மரியாதை குறைவாக பேசியதில்லை என்றும், தினகரன் முதலமைச்சரை மரியாதைக் குறைவாக பேசியது தங்களின் மனதை புண்படுத்தியது’ என்றும் கூறினார். தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்ற தினகரனால் சிறந்த ஆட்சியை தர முடியுமா? என அவர் கேள்வி எழுப்பினார். அத்துடன் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறுபவர்களுடன் தான் தினகரன் கூட்டு சேர்ந்துள்ளார் என்று கூறிய அவர், ஸ்டாலினும் தினகரனும் எத்தனை சதித்திட்டம் தீட்டினாலும் போராடி ஆட்சியை நிலை நாட்டுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com