ஆளுநர்-அதிகாரிகள் சந்திப்பு ஆரோக்கியமானது: எஸ்.பி வேலுமணி
ஆளுநர் பன்வாரிலால் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஆரோக்கியமானதுதான் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவைக்குச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கோயமுத்தூர் நகரத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆளுநருக்கு அதிகாரிகள் விளக்கியதாகத் தெரிகிறது. இச்சந்திப்பு நடந்து கொண்டிருக்கையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியும் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, ஆளுநர் அதிகாரிகள் சந்திப்பு ஆரோக்கியமானதுதான் எனத் தெரிவித்தார்.
இதேபோன்று அதிகாரிகளை ஆளுநர் சந்தித்தது மகிழ்ச்சி தரக் கூடி விஷயம் என பாரதிய ஜனதாக் கட்சியின் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இவ்விஷயத்தில் அதிகார மீறல் எதுவும் இருந்தால், அதுகுறித்து தெரிவிக்க வேண்டியது மாநில அரசும், அதிகாரிகளும் தான் என்றும் அவர் தெரிவித்தார். அவ்வாறு கருத்துகூறும் பட்சத்தில் தாங்கள் பதில் தெரிவிப்பதாகவும் வானதி கூறினார்.