குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் முயற்சி: எஸ்.பி.வேலுமணி சாடல்

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் முயற்சி: எஸ்.பி.வேலுமணி சாடல்

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் முயற்சி: எஸ்.பி.வேலுமணி சாடல்
Published on

குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டா‌லின் செயல்படுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை சிங்காநல்லூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளரிடம் பேசுகையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிடக்கூடாது என சிலர் தேவையில்லாமல் பிரச்னை செய்வதாக சாடினார். ஓபிஎஸ் அணியினரை சொந்த சகோதரர்கள் போன்றே கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சரின்‌ தொகுதியில் தூர்வாரும் பணியை மேற்கொண்டது என்பது உள்நோக்கம் கொண்டது என்றும், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது திமுக தமிழக நலன் கருதி செய்த பணிகள் என்ன என்றும் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com