உபி: குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன் - அமைச்சர் ஸ்மிருதி இரானி

உபி: குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன் - அமைச்சர் ஸ்மிருதி இரானி

உபி: குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன் - அமைச்சர் ஸ்மிருதி இரானி
Published on

பெண்கள், குழந்தைகள் மற்றும் ஜவுளித்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி எகனாமிக் டைம்ஸிற்கு பேட்டி அளித்தபோது, அவரிடம் ஹத்ராஸ் பெண்ணின் கூட்டு பாலியல் வன்கொடுமை, நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விரைவில் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என கூறியுள்ளார்.

அவர் பேசியபோது, தேசிய பெண்கள் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், மருத்துவமனைக்குச் சென்று விசாரித்ததுடன், இறந்த பெண்ணின் குடும்பத்துடனும் பேசியுள்ளனர். இந்த வழக்கில் விரைவில் நீதி கிடைக்கவேண்டும் என நானே தனிப்பட்ட முறையில் உத்தரபிரதேச முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சருடன் இதுகுறித்து பேசினேன். மாநில அரசால் சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சரும் உறுதியளித்துள்ளார். அது தூக்குதண்டையாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

என்னால் முடிந்த அனைத்து அதிகாரிகளையும் தொடர்புகொண்டு அந்த பெண்ணுக்கும், அவர் குடும்பத்திற்கும் விரைவில் நீதிகிடைக்கவேண்டும் என்பதை உறுதிசெய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால் ஒரு பெண்ணாக சிந்திக்கும்போது, அந்த பெண்ணை திரும்பப்பெற முடியுமா என கேள்வி எழுகிறது. சீக்கிரத்தில் நீதிகிடைக்கும் என்பதை நான் உறுதிபடுத்துகிறேன்.

நமது அரசாங்கமும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தங்களையும் கொண்டுவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அமைத்துத்தர தேசிய பெண்கள் ஆணையமும் வழிவகை செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற குற்றங்களை தடுக்க உள்துறை அமைச்சரிடமும் கலந்தாலோசித்துள்ளேன். கூட்டு பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரணத்தைவிட சரியான தண்டனை இருந்துவிட முடியாது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து கண்காணிக்கும் வகையில், ஊரடங்கு காலத்திலும் அதிகாரிகள் செயல்பட்டுவருகிறார்கள். மாநிலங்களும், சமூகமும் ஒன்றிணைந்து பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும். இனிவரும் சந்ததிகள் தவறுசெய்தால் உடனே தண்டனை கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். பெண்கள் பிரச்னை அரசியல் பிரச்னை அல்ல. இது நாடுசார்ந்த பிரச்னை’’ என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com