“கொரோனா என்னை ‘லைட்டா டச்’ பண்ணிட்டு போச்சு” - அமைச்சர் செல்லூர் ராஜூ

“கொரோனா என்னை ‘லைட்டா டச்’ பண்ணிட்டு போச்சு” - அமைச்சர் செல்லூர் ராஜூ
“கொரோனா என்னை ‘லைட்டா டச்’ பண்ணிட்டு போச்சு” - அமைச்சர் செல்லூர் ராஜூ

கொரோனா தன்னை ‘லைட்டா டச்’ பண்ணிவிட்டு சென்றதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நகைச்சுவையாக தெரிவித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனோ நோய் தொற்றிலிருந்து குணமடைந்து மதுரை திரும்பினார். அவருக்கு கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்விற்காக அமைக்கப்பட்ட சிறிய மேடையில் கட்சி நிர்வாகிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் திரளாக கூடினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “ஒரு மாதத்திற்கு பிறகு நாளை முதல் பொதுப்பணியில் ஈடுபட உள்ளேன். வடிவேல் சொன்னது போல கொரோனா என்னை லைட்டா டச் பண்ணிவிட்டுச் சென்றது. கொரோனோவிற்கு சிகிச்சை எடுத்த என் மனைவியை சந்திக்க சென்றபொழுது எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. உரிய சிகிச்சை எடுத்ததால் கொரோனோவிலிருந்து குணமடைந்து உள்ளோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com