வாசலில் சாணம் தெளிக்கலாம்.. செல்லூர் ராஜூ புது ஐடியா..!

வாசலில் சாணம் தெளிக்கலாம்.. செல்லூர் ராஜூ புது ஐடியா..!

வாசலில் சாணம் தெளிக்கலாம்.. செல்லூர் ராஜூ புது ஐடியா..!
Published on

வீட்டு வாசலில் சாணம் தெளிக்கும் பழைய முறையை கடைபிடித்தால் கிருமிகளை அண்டவிடாமல் தடுக்கலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை ‌சோலை அழகுபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி ‌வைத்தார். பின்னர் வீடுவீடாக சென்று டெங்கு‌ பரவுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அமைச்சர் ஏற்படுத்தினார். அரசுடன் இணைந்து மக்களும் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருந்தால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை ஒழிக்க முடியும் என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், “எத்தனையோ கிருமி நாசினிகளை பயன்படுத்தினாலும் பண்டைய நாகரிகமான சாணி தெளிக்கும் முறையை கடைபிடித்தால் கிருமிகளை அண்டவிடாமல் தடுக்கலாம். கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இந்த முறையை கடைபிடிக்கலாம். அதற்காக பளிங்கு தரைகளில் சாணம் தெளிக்க வேண்டும் என்று சொல்லவில்லை” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com