“வெட்டி வா என்றால்.. கட்டி வருபவர்கள் அதிமுக தொண்டர்கள்” : செல்லூர் ராஜூ பேச்சு

“வெட்டி வா என்றால்.. கட்டி வருபவர்கள் அதிமுக தொண்டர்கள்” : செல்லூர் ராஜூ பேச்சு

“வெட்டி வா என்றால்.. கட்டி வருபவர்கள் அதிமுக தொண்டர்கள்” : செல்லூர் ராஜூ பேச்சு
Published on

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நாடாளுமன்ற தேர்தலுக்கான அச்சாரம் போடும் விழாவாக இருக்கிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை ரிங்ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அதிமுக மதுரை மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அப்போது “அதிமுக தொண்டர்களின் எழுச்சியும், மகிழ்ச்சியும் தான் திமுகவை தூங்கி விடவில்லை. அதனால் தான் திமுக தலைவரை ஊர் ஊராக கிராமம் கிராமமாக சுற்ற வைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நாடாளுமன்ற தேர்தலுக்கான அச்சாரம் போடும் விழாவாக இருக்கிறது. ஜெயலலிதா நம்மிடையே இல்லை. இருந்தாலும் ஜெயலலிதா கொடுத்த ஆட்சியும், கட்சியும் நம்மிடையே உள்ளது.

அன்றைக்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவை பார்த்து எம்.ஜி.ஆர் படத்துக்கு கேரண்டி உண்டு. ஆனால் எம்.ஜி.ஆர் கட்சிக்கு கேரண்டி இல்லை என கூறினார். எம்.ஜி.ஆர் படம் நூறு நாள் ஓடும், ஆனால் அவர் கட்சி 100 நாளாவது இருக்குமா என்று கேள்வி கேட்டவர் கலைஞர். கேள்வி கேட்ட கலைஞரை 13 ஆண்டு காலம் கோட்டை பக்கம் வராமல் செய்தவர் எம்.ஜி.ஆர். தலைவர் இல்லை. ஜெயலலிதா இல்லை. ஆனால் தொண்டர்கள் இருக்கிறார்கள். வெட்டி வா என்றால் கட்டி வருபவர்கள் அதிமுக தொண்டர்கள். 

நடிகர் வடிவேலுவை போல மக்கள் ஸ்டாலினை பார்க்கிறார்கள். காசு கொடுத்து கூட்டம் கூட்டி கிராம சபை கூட்டங்களை நடத்துகிறார் ஸ்டாலின். முன்கூட்டியே தயார் படுத்தி சொல்லிக்கொடுத்து கேள்விகளை கேட்க வைத்து கிராம சபை கூட்டங்களை நடத்துகிறார்கள். ஸ்டாலின் நமக்கு எதிரியே கிடையாது. சுகந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் ஸ்டாலின். இன்றைக்கு இளைஞர்கள் ஸ்டாலினை வைத்து தான் மீம்ஸ் போடுகிறார்கள். காங்கிரஸ்-திமுக பொருந்தாத கூட்டணி. மறைந்த கலைஞர் காங்கிரசோடு கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று சொல்லியிருந்தார். தற்போது இந்த கூட்டணி தற்கொலை கூட்டணியாக தான் உள்ளது. திமுக ஒட்டு போட்ட கட்சி. திமுகவால் அதிமுகவை ஒருபோதும் வீழ்த்த முடியாது. அனைவரிடமும் ஆலோசனை செய்யக்கூடிய ஜனநாயக அமைப்பாக அதிமுக இருக்கிறது” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com