தாலிக்கு தங்கம் திட்டம்... இலங்கை அகதிகளுக்கும் விரிவாக்கம்

தாலிக்கு தங்கம் திட்டம்... இலங்கை அகதிகளுக்கும் விரிவாக்கம்

தாலிக்கு தங்கம் திட்டம்... இலங்கை அகதிகளுக்கும் விரிவாக்கம்
Published on

இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள பெண்களுக்கும் தாலிக்கு தங்கம் திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமூகநலன், சத்துணவு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கை மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில் அமைச்சர் சரோஜா இந்த அறிவிப்பை வெளியிட்டார். அங்கன்வாடி மையத்தில் உள்ள 30 ஆயிரம் காலிப்பணிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 15 தேதி அனுசரிக்கப்படும் என்றும், 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களுக்கு 1.40 கோடி செலவில் சுகாதார பைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சரோஜா சட்டப்பேரவையில் அறிவித்தார். 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com