\
ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Published on

ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படுவோருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக “பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன். இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம், ஆனால், நமது வாழ்க்கையில் இழந்த முக்கியமான நேரத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது” என இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்திருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com