ஜீயரே கோபமாக பேசும் வகையில் பேசியது தவறு: ராஜேந்திரபாலாஜி

ஜீயரே கோபமாக பேசும் வகையில் பேசியது தவறு: ராஜேந்திரபாலாஜி
ஜீயரே கோபமாக பேசும் வகையில் பேசியது தவறு: ராஜேந்திரபாலாஜி

ஜீயரே கோபமாக பேசும் வகையில் இந்து கடவுளை விமர்சித்து பேசியது தவறு என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

வைரமுத்துவை கண்டித்து நாமக்கலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜீயர் சடகோப ராமானுஜர், 
பிப்ரவரி 3-ம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். மேலும், “கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால் செய்ய மாட்டோம். ஆனால், இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும், இனி அமைதியாக போகமாட்டோம்” என்று கூறினார். ஜீயரின் கருத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜீயரின் சோடா பாட்டில் பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவு தெரிவித்துள்ளார் . ஜீயரே கோபமாக பேசும் வகையில் இந்து கடவுளை விமர்சித்து பேசியது தவறு என்று அவர் கூறியுள்ளார். ஜீயர் பேச்சு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “கருத்து சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது. சோடாபாட்டில் வீசுவேன் எனப் பேசியது பொறுப்பற்ற பேச்சு. யார் பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது” என்று கூறி இருந்தார்.

முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்கவில்லை என்று எழுந்த சர்ச்சையிலும் விஜயேந்திரருக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவு தெரிவித்து இருந்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது விஜயேந்திரர் அமர்ந்திருந்ததில் தவறில்லை என்று கூறினார். அதிமுக தலைவர்கள் பெரும்பாலோனோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ராஜேந்திர பாலாஜி ஆதரித்து பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com