திமுகவுக்கு பில்டிங்கும் வீக், பேஸ்மெண்டும் வீக்: ராஜேந்திர பாலாஜி

திமுகவுக்கு பில்டிங்கும் வீக், பேஸ்மெண்டும் வீக்: ராஜேந்திர பாலாஜி
திமுகவுக்கு பில்டிங்கும் வீக், பேஸ்மெண்டும் வீக்: ராஜேந்திர பாலாஜி

திமுகவுக்கு தற்போது பில்டிங்கும் வீக், பேஸ்மெண்டும் வீக் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “திமுகவுக்கு தற்போது பேஸ்மெண்டும் வீக், பில்டிங்கும் வீக்காக உள்ளது. ஆர்.கே நகர் தொகுதியில் கண்ட தோல்வியை அதிமுக படிக்கட்டாக பயன்படுத்தி, வரும் தேர்தல்களில் வெற்றி பெறும். ஆனால் திமுகவுக்கு பேஸ்மெண்ட்டும் வீக்காகிவிட்டதால், எப்பொழுது வேண்டுமானாலும் பில்டிங் விழுந்து விடும்” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தேமுதிக கட்சி அழிந்து போய்விட்டது என்றும், நடிகர்கள் தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com