அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் அதிமுகவில் மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சர்களில் அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கடந்த மார்ச் மாதம் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென்று நீக்கப்பட்டார். இதுதொடர்பாக அப்போது, ஓபிஎஸ் - ஈபிஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விருதுநகர் மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் அதிமுக விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு
வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டு அறிக்கையில், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலங்கள் மாற்றி அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை என 5 மாவட்டங்களுக்கு தொழில்நுட்ப பிரிவு அணி பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 இதுதவிர கட்சிப் பதவி நீக்கப்பட்டிருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவரை நியமிக்கும் வரை ராஜேந்திர பாலாஜி பொறுப்பில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com