டிரெண்டிங்
ஸ்டாலின் தலைமை பண்பு இல்லாதவர்: ஓ.எஸ்.மணியன் விமர்சனம்
ஸ்டாலின் தலைமை பண்பு இல்லாதவர்: ஓ.எஸ்.மணியன் விமர்சனம்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமை பண்பு இல்லாதவர் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிமுகவின் 46-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் போது, "திமுக செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என எண்ணுகிறார். அதற்காக அவர் பேசும் பேச்சுகள் தலைமை பண்புக்கு சற்றும் பொருந்தாத வகையில் உள்ளது. ஸ்டாலின் நமக்கு நாமே திட்டம் போல் வேறு எந்தப் பயணத்தை மேற்கொண்டாலும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.