கருப்பு நெருப்பை முதலில் பற்ற வைத்தது யார்?: அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்

கருப்பு நெருப்பை முதலில் பற்ற வைத்தது யார்?: அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்
கருப்பு நெருப்பை முதலில் பற்ற வைத்தது யார்?: அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்

கருப்பு நெருப்பை முதலில் பற்ற வைத்தது யார்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என நம்புகிறேன். நெருப்பில் நீந்தி காவிரிக்காக போராடியது அதிமுக தான். அதாவது சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டது அதிமுக இயக்கம். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அதிமுகவும், தமிழக அரசும் முத்தரப்பு அழுத்தத்தை கொடுத்தது” என்றார். 

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “வன்முறை மூலம் எதற்கும் தீர்வு காண முடியாது என்பதை போராடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; அறவழிப் போராட்டங்கள் மூலம் நமது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தவறு கிடையாது” என்றார்.

தமிழகம் முழுவதும் பிரதமர் மோடிக்கு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல், கருப்பு ஆடை அணிந்து பலரும் தங்களது வெறுப்பை வெளிப்படுத்தினர். உச்சநீதிமன்றத்தில் வழக்கை திரும்ப பெறுங்கள். இல்லையேல், கருப்பு என்கிற நெருப்பு அணையாது என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்த ஜெயக்குமார் கூறுகையில், “கருப்பு நெருப்பை முதலில் பற்ற வைத்தது யார்?. 1974இல் திமுக ஆட்சி காலத்திலேயே காவிரி நெருப்பு பற்ற வைக்கப்பட்டது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com