\
அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: ஜெயக்குமார்

அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: ஜெயக்குமார்

அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: ஜெயக்குமார்
Published on: 

அதிமுக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை வரும் 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டத்தில் எதிர்க்கட்சி உள்ளது. அத்துடன் டிடிவி தினகரனும் சட்டப்பேரவைக்கு வருவார் என்பதால் அதிமுகவில் குழப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் தனது ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் என தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “மு.க.ஸ்டாலினாக இருந்தாலும் சரி, தினகரனாக இருந்தாலும் சரி அவர்களுடைய குறுகிய எண்ணமான அரசை கவிழ்க்கும் பகல் கனவு நிறைவேறாது. அதிமுக அரசுக்கு போதுமான பெரும்பான்மை இருக்கிறது. இது குதிரை பேர அரசு அல்ல, குதிரை வேக அரசு” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com