\
‌கச்சத்தீவை மீட்பதில் அரசு உறுதி: ஜெயக்குமார்

‌கச்சத்தீவை மீட்பதில் அரசு உறுதி: ஜெயக்குமார்

‌கச்சத்தீவை மீட்பதில் அரசு உறுதி: ஜெயக்குமார்
Published on

ஒகி புயலால் கடலில் தத்தளிக்கும் மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், கடைசி மீனவர் மீட்கப்படும் வரை தேடும் பணி தொடரும் என‌ உறுதியளித்தார். இதுவரை கரை திரும்பாத 400க்கும் அதிகமான மீனவர்களை அதிநவீன உபகரணங்களைக் கொண்டு அறிவியல் பூர்வமாக தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தது குறித்தும், துப்பாக்கி சூடு நடத்தியது பற்றியும் செய்தியாளர்கள் கேட்டபோது, காற்றின் வேகம் காரணமாக தெரியாமல் மீனவர்கள் எல்லை தாண்ட நேரிடுகிறது என தெரிவித்தார். இந்தப் பிரச்னைக்கு, கச்சத்தீவை மீட்பதே தீர்வு என குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார், இதற்காக ‌மத்திய அரசு மூலம் தொடர்ந்து அழுத்தம் ‌கொடுத்து வருவருவதாகவும் தெரிவித்தார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com