நீதிமன்றம் உத்தரவிட்டால் டெங்கு நிவாரணம்: ஜெயக்குமார் பேட்டி

நீதிமன்றம் உத்தரவிட்டால் டெங்கு நிவாரணம்: ஜெயக்குமார் பேட்டி

நீதிமன்றம் உத்தரவிட்டால் டெங்கு நிவாரணம்: ஜெயக்குமார் பேட்டி
Published on

டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, நீதிமன்ற தீர்ப்பின்படி அது முடிவு செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கோரும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்குகிறதோ அதற்கேற்ப அரசு செயல்படும். ஜெயலிதாவின் அண்ணன் பெயர் ஜெயக்குமார். அவர் பெயரைத் தான், குழந்தைக்கு சசிகலா பெயர் சூட்டியுள்ளார். அதில் நான் என்ன கருத்து சொல்ல முடியும்..?. தமிழர்கள் உலகம் எங்கு தொழில் செய்ய சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. அதனடிப்படையில் தான் செயல்படுகிறோம். ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்றதாக கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் எந்தவித குற்றமும் செய்யவில்லை என்பது உறுதியானால் அதற்கு தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். செம்மரம் வெட்ட தடை செய்யப்பட்டுள்ளது. அதனை யார் வெட்டினாலும் தவறுதான். தவறு செய்பவர்களுக்கு உடந்தையாக இருக்க முடியாது. தவறு செய்யாமல் யாரும் தண்டிக்கப்பட்டால் அதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com