ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுக கருத்து அல்ல: அமைச்சர் ஜெயக்குமார்

ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுக கருத்து அல்ல: அமைச்சர் ஜெயக்குமார்

ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுக கருத்து அல்ல: அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுக கருத்து அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை காசிமேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் “முதல்வர் வேட்பாளர் குறித்து பொதுவெளியில் பேசுவது கட்சியை பலவீனப்படுத்துவதாகவே அமையும். முதல்வர் வேட்பாளர் பற்றி உரிய நேரத்தில் கட்சி முடிவு எடுக்கும். பாஜக தலைமையில் கூட்டணி என்பதை அந்த கட்சியின் மாநில தலைவர் முருகன் கூறவில்லை. கூட்டணி பற்றி பாஜகவின் மாநில தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமிதான் 'என்றும் முதலமைச்சர்" என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்திருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com