டிரெண்டிங்
சசிகலாவை ஒதுக்கிய முடிவில் அணுஅளவும் மாற்றம் இல்லை: ஜெயக்குமார்
சசிகலாவை ஒதுக்கிய முடிவில் அணுஅளவும் மாற்றம் இல்லை: ஜெயக்குமார்
சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைத்த முடிவில் அணு அளவும் மாற்றம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைத்த முடிவில் அணு அளவும் மாறுபட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இதில் வேறு யாராவது மாறுபட்ட கருத்துக் கூறினால், அது அவர்களது தனிப்பட்ட கருத்து. எங்கள் தரப்பை பொறுத்தவரையில், மக்களாலும், கட்சியினராலும் ஒதுக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டுத்தான் தற்போதைய கட்சியும், ஆட்சியும் நடைபெறுகிறது. இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.” என்று கூறினார்.