ஜெ. இறப்பு விவகாரத்தில் அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம்: துரைமுருகன் பேச்சு
ஜெயலலிதாவின் இறப்பு விவகாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் விரும்பாத அதிமுக ஆட்சிக்கு விரைவில் முடிவு பிறக்கும் என விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன், தமிழகத்தில் அனைத்து தறைகளிலும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு அதிக அளவலிலான கமிஷன் தொகை வாங்கப்படுகின்றது என்றார். சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பணியிடம் மாற்றம் செய்யப்படமால் உள்ளனர் என குற்றம்ச்சாட்டினர். முன்னாள் முதல்வர் ஜெயலிலதா இருந்தபோது மத்திய அரசின் திட்டங்காளன நீட், நவோதயா மற்றும் உதய் மின் திட்டம் போன்ற திட்டங்களை அனுமதிக்கவில்லை என்றும், தற்போது அம்மா ஆட்சியை நடத்தி வருகிறோம் என்று கூறும் தற்போது உள்ள ஆட்சி நீட், நவோதயா மற்றும் உதய் மின் திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு நவோதயா பள்ளிகள் மூலம் இந்தியை புறவாசல் வழியாக கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றது. இதற்கு தமிழக அரசு துணையாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து பேசிய துரைமுருகன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலிலதா இறப்பு குறித்து உண்மையை வெளிப்படையாக பேசி வருகிறார். மக்கள் விரும்பாத இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.