வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மின்கம்பம் மீது லாரி மோதியதில் மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்தவரின் உடலை பார்த்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கதறி அழுதார்.
வேலூர் மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த பொன்னரசு என்பவர், தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பத்தில் இருந்த மின்வயர் அறுந்து பொன்னரசு மற்றும் அவரது மனைவி மீது விழுந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே பொன்னரசு உயிர் இழந்தார். உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட பொன்னரசுவின் உடலை பார்த்து, அங்கு வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கதறி அழுதார். தொழிலாளரின் உடலை பார்த்து அழுத அமைச்சரை அங்கு இருந்தவர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர்.