\
எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடுகிறது மத்திய அரசு: ஓ.பன்னிர்செல்வம்

எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடுகிறது மத்திய அரசு: ஓ.பன்னிர்செல்வம்

எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடுகிறது மத்திய அரசு: ஓ.பன்னிர்செல்வம்
Published on: 

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு கூறியுள்ளதாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவில் அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடவேண்டும் என தாம் முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பியிருந்ததாக கூறியுள்ளார். தமது வேண்டுகோளை ஏற்று எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் கடந்த 17-ம் தேதி ஒப்புதல் கடிதத்தை தமக்கு அனுப்பியிருப்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துகொள்வதாகவும் பன்னீர்செல்வம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com