
திருவாரூரில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், 319 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்
திருவாரூரில் இன்று காலை தொடங்கிய புகைப்படக் கண்காட்சியை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தொடங்கி வைத்தார். பின்னர் சுமார் பத்தாயிரத்து 500 மாணவர்கள் பங்கேற்கும் திறன்மேம்பாட்டு பயிற்சி தொடங்கியது. அதில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் கடம்பூ ராஜூ, காமராஜ், பாலகிருஷ்ண ரெட்டி, மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மாலை நான்கு மணியளவில் நடைபெறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், 319 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விழாவில் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொள்ளும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.