எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் - ரூ.75 கோடிக்கு திட்டப் பணிகள் தொடக்கம்
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி 75 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட திட்டப் பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 75 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளைத் வழங்குகிறார். சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கும் இவ்விழாவில், எம்.ஜிஆரின் உருவப்படத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார். 27 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வரும் 2-ஆம் தேதி நடக்கவிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக 23 ஏக்கர் பரப்பளவில், விழா மேடை, பார்வைக் கூடம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக நூற்றாண்டு விழாவை 3ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.