\
செல்போன் டவர் மீது அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் !

செல்போன் டவர் மீது அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் !

செல்போன் டவர் மீது அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் !
Published on: 


கள்ளம்புளியில் டவரின் உச்சியில் ஏறி அமர்ந்திருந்த அருணாசலம் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.


தென்காசி மாவட்டம் சேந்தமரம் அருகே உள்ள கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (26). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் இன்று அதிகாலை குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள் திட்டியதால் ஆத்திரம் அடைந்தது வீட்டில் உள்ள பொருட்களை உடைத்துவிட்டு அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர். மனநலம் பாதிக்கப்பட்ட அருணாசலத்திடம் பக்குவமாக பேசி அவரை பத்திரமாக மீட்டனர். பின்பு அந்த இளைஞரை காவல்துறையினர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com