
தற்போதைய சூழலில் பலரும் தங்களின் வீடுகளில் செல்லப் பிராணியாக நாய், பூனை, கிளி, புறா போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். அவ்வாறு வளர்க்கும் செல்லப் பிராணிகளை தங்களது குடும்பத்தில் ஒருவராகவும் நினைக்கின்றனர். அதிலும் சிலரெல்லாம் தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கு சீமந்தம், பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.
இப்படியானவர்களுக்கு மத்தியில், மதுரவாயலில் உயிரிழந்த தன் நாய்க்கு அதன் உரிமையாளர் ஒருவர் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டி இருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
அந்த போஸ்டரில் உயிரிழந்த சீஜே-வுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி என்றும் நினைவுகளுடன் அப்பா என்றும் உள்ளது.