கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோரினார் மீராகுமார்

கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோரினார் மீராகுமார்

கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோரினார் மீராகுமார்
Published on

திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் மீராகுமார் ஆதரவு கோரினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார் தனக்கு ஆதரவு கேட்டு சென்னை வந்துள்ளார். இந்நிலையில், இன்று சென்னை கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக இன்றுகாலை புதுச்சேரி சென்ற அவர் காங்கிரஸ் மற்றும் இதரக் கட்சி எம்.எல்.ஏக்களிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமக்கு வாக்களிக்க ஆதரவு கோரினார். பின்னர் சென்னை திரும்பிய அவர், திமுக, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கோரினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com