டிரெண்டிங்
மீராகுமாரை அறிவித்தது நாட்டு மக்களுக்கு ஏமாற்றமான முடிவு
மீராகுமாரை அறிவித்தது நாட்டு மக்களுக்கு ஏமாற்றமான முடிவு
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி்களின் வேட்பாளராக மீராகுமார் அறிவிக்கப்பட்டது, நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ள முடிவு என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையில் நடத்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு 17 கட்சிகள் இணைந்து மீராகுமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்தெடுத்துள்ளனர். ராம்நாத் கோவிந்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமின்றி, ஐக்கிய ஜனதா தளம், அதிமுகவின் இரு அணிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்கும் போது, எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருப்பது நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விமர்சித்துள்ளார்.