
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஆட்சேபனை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதற்கு திமுக முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவதில் தடை இல்லை என்றால், கர்நாடகம் புதிய அணை கட்டுவதில் எந்த எதிர்ப்பும் இல்லை என தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சேகர் நாப்டே வாதாடி இருப்பது தமிழகம் தற்கொலை செய்வதற்கு சமம் என கண்டித்துள்ளார். இப்படியொரு செய்தி வந்த பிறகும், இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.