தண்டவாளத்தில் டைவடித்து காப்பாற்றிய காவலர்: அசந்துபோன வைகோ!
தஞ்சையில் ரயிலுக்கு முன் பாய்ந்த மதிமுக தொண்டரை காவல்துறை அதிகாரி திறமையாக காப்பாற்றினார்.
கர்நாடகாவில் இருந்து தமிழக விவாசயத்திற்காக காவிரி நீரை பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக, மதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சையில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
போராட்டம் நிறைவடைந்து ரயில் புறப்படும் நேரத்தில், திடீரென மதிமுக தொண்டர் ஒருவர் கட்சிக்கொடியுடன் ரயிலின் முன் பாய்ந்து, நிறுத்த முயன்றார். இதனால் எல்லோரும் பதற, சட்டென்று அருகில் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த தொண்டரை பாய்ந்து பிடித்து காப்பாற்றினார். இதையடுத்து காப்பாற்றிய காவலருக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்ட வைகோவும் அந்த காவல் அதிகாரியை பாராட்டினார்.