வைகோ குறித்து அவதூறு பரப்பும் மீம்ஸ்களால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ் நேற்று தீக்குளித்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
விருதுநகரில் வசிக்கும் வைகோ மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ் நேற்று பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதை கேள்விபட்டதும் மருத்துவமனைக்கு சென்ற வைகோ கண்ணீர் விட்டு கதறினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, ஸ்டெர்லைட் விவகாரத்தில் தான் பணம் பெற்றுக் கொண்டதாக நாம் தமிழர் கட்சியினர் செய்யும் பொய் பரப்புரையால் தனது குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாக தெரிவித்தார். இது மாதிரியான பொய் பரப்புரையை நான் தாங்கி கொள்வேன் என்றும் ஆனால் அதை என் வீட்டில் இருப்பவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. பணம் பெற்றுக் கொண்டதாக தன் மீது பொய்யான விமர்சனங்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் வந்த 'மீம்ஸ்'களால் சரவண சுரேஷ் மனஉளைச்சலில் இருந்ததாகவும் வைகோ தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் சரவணன் சுரேஷ் குடும்பத்திற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

