ஈரோட்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு ?

ஈரோட்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு ?
ஈரோட்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு ?

ஈரோடு மக்களவை தொகுதியில் தனிச்சின்னத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  

வைகோ-வின் ம.தி.மு.க ஈரோடு தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் அக்கட்சியின் பொருளாளரான அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிடுவார் என  வைகோ தெரிவித்தார். ஆனால் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படவில்லை. திமுக சின்னமான உதய சூரியனிலெயே போட்டியிடுவாரா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்நிலையில் ஈரோடு மக்களவை தொகுதியில் தனிச்சின்னத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் ''மதிமுகவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளோம்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com