மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை?: அதிகாரப்பூர்வ தொகுதி பட்டியல் வெளியீடு

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை?: அதிகாரப்பூர்வ தொகுதி பட்டியல் வெளியீடு
மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை?: அதிகாரப்பூர்வ தொகுதி பட்டியல் வெளியீடு

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை என்பது இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 187 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் நிகழாத ஒன்று. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 6 தொகுதியில் போட்டியிடவுள்ளது. 6 தொகுதிகள் எவை என்பது இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி  சாத்தூர், அரியலூர்,மதுராந்தகம்(தனி), வாசுதேவநல்லூர்(தனி),மதுரை தெற்கு,பல்லடம் ஆகிய தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது. இந்தக்கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக எதிர்கொள்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகியுள்ளதாகவும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com