‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு 6 தொகுதிகளை அதிகாரபூர்வமாக ஒதுக்கியுள்ளது திமுக.

திமுக, மதிமுக தொகுதி பங்கீட்டில் 6 தொகுதிகள் உறுதியாகியுள்ளது. அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின் வைகோ முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 12 தொகுதிகள் கேட்டிருந்த நிலையில் திமுக 6 தொகுதிகளை மதிமுகவுக்கு ஒதுக்கியுள்ளது.

இந்த 6 தொகுதிகளிலுமே மதிமுக உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் விகவுக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  6 தொகுதிகள், ஐயூஎம்எல் கட்சிக்கு 3, மமகவுக்கு 2 தொகுதிகள் என ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com